மெய்யழகன்’ படத்துக்கு பிறகு கார்த்தி நடிப்பில் ‘வா வாத்தியார்’ வெளியாக இருக்கிறது.
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வா வாத்தியார்’ படத்தில் முன்னணி நடிகரான கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர் !
எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி இருப்பார் எனவும், அவருக்கு வில்லனாக சத்யராஜ் அவர்கள் நடிக்க உள்ளார் !
வா வாத்தியார் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவரின் வில்லன் கதாப்பாத்திரங்கள் இன்னும் அதிக வரவேற்பை பெற்றது.
நூறாவது நாள், 24 மணி நேரம் போன்ற படங்கள் மூலம் வில்லனாக அறிமுகமானார் சத்யராஜ். குறிப்பாக நூறாவது நாள் திரைப்படத்தில் மொட்டைத் தலையுடன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வரும் சத்யராஜ் கெட்டப் மிரட்டலாக இருக்கும். 1978 – 1985 இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் சத்யராஜ் நடித்து முடித்திருந்தார். பெரும்பாலான படங்களில் இவர் வில்லன் கேரக்டர்களில் தான் நடித்திருந்தார்.
சத்யராஜை வில்லனாக பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்று நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல ட்ரீட் ஆக இருக்கும் ! read more

Leave a Reply