The man with the power of Fire என்று கங்குவா பெயருக்கு அர்த்தம் என்று இயக்குனர் கூறியிருந்தார் ! ஒரு நெருப்பை போல சூர்யா நடித்திருந்தாலும் சில காட்சிகள் அவரின் நெருப்பான நடிப்பிருக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தது போல இருந்தது படத்தின் கதை.
மையக்கதை : 2024-ம் ஆண்டில், குற்றவாளிகளை ரகசியமாக கண்டுபிடித்து போலீசுக்கு ஒப்படைக்கும் ‘பவுண்ட்டி ஹண்டர்’ ஆக செயல்படுகிறார் பிரான்சிஸ் தியோடர் (சூர்யா). அதே நேரத்தில், இந்திய எல்லைப்பகுதியில் உள்ள ஒரு ரகசிய ஆய்வு மையத்தில் மூளை வளர்ச்சியை மேம்படுத்தும் பரிசோதனை நடக்கிறது. அங்கு இருந்து தப்பித்துச் செல்லும் சிறுவன் ஸெட்டா (Zeta) தனக்குப் பின்னால் துரத்தும் கும்பலை எதிர்கொள்கிறான்.
இந்த சூழ்நிலையில் பிரான்சிஸும் ஸெட்டாவும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். அங்கிருந்து கதை 1070-ம் ஆண்டுக்குத் திரும்புகிறது. அங்கு ஐந்தீவுகளில் ஒன்றான பெருமாச்சியை காப்பாற்றும் இளவரசனாக கங்குவா (சூர்யா) இருப்பதைப் பார்க்கிறோம். அதே நேரத்தில், அந்தத் தீவை கைப்பற்ற ரோமானியர்கள் பெரும் படையோடு வருகிறார்கள். அவர்களின் சதி காரணமாக, பக்கத்து தீவின் அரத்தி குல அரசனான ருத்திரன் (பாபி தியோல்) கங்குவாவின் பெருமாச்சி மீது போருக்கு வருகிறான். இந்தப் போரில் வெற்றி பெறுவது யார்? 2024 மற்றும் 1070 ஆகிய காலகட்டங்களுக்கு இடையிலான தொடர்பு என்ன? எனும் புதிர்களுக்கு விடை காண்பதே `கங்குவா’ படத்தின் மையக்கதை.
கங்குவா விமர்சனம்:
இவங்க ஏன் இதெல்லாம் பண்றாங்க , இவங்க பண்றது காமெடி ஆ ? அவ்வளவு பணக்காரத்தனமா காமிச்சுட்டு KS ரவிக்குமார் கொடுக்கும் 5 லட்சம் , 10 லட்சத்திற்கு சூர்யாவும் , திஷா பதானி யம் சண்டை போட்டுகொள்ளுவது , பெண்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று பிளேபாய் போல தன்னை காட்டிக்கொள்ள சூர்யா மிகவும் சிரம பட்டுள்ளார் , முன்னொரு காலத்தில் The Boys தீம் இன்ஸ்டாகிராம் இல் பிரபலமான இசையை போட்டும் நம்மை ஐயோ என்று தலை மீது கை வைத்து புலம்பும் படி செஞ்சுட்டு போய்ட்டார் இயக்குனர் சிவா !
ரம்மியம் நிறைந்த மலைப் பிரதேசம், வித்தியாசமான அணிகலன், ஆடைகள் அணிந்த முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட மக்கள், அடிக்கடி சண்டைக் காட்சிகள் என அனைத்தும் சிறப்பாக இருந்தாலும் அதை ரசிக்க முடியாமல் அந்தக் காட்சிகள் முழுவதும் இருட்டாகவே இருக்கிறது. 3 டியில் பார்த்தால் கூட மனதிற்கு ஒட்டவில்லை.

படத்தின் முதல் அரைமணிநேரம் ஜோதிகா அவர்கள் கூறியது போல் தான் இருந்தது !
சூரரை போற்று ,ஜெய் பீம் போன்ற படத்தில் நடித்த சூர்யா ஏன் இப்படி என்று மக்கள் அனைவரையும் புலம்ப வைத்துவிட்டார் .
இருந்தாலும் கங்குவா வாக வரும் சூர்யாவின் ஆக்ரோஷமான நடிப்பு, ஆவேசம், வீரம் நம்மைக் கவர்கிறது. 1070களின் கதையில் வரும் கங்கா என்ற அந்த இளவரசனாக அதீத ஈடுபாட்டுடன் சூர்யா நடித்திருப்பது தெரிகிறது. அத்தனை முயற்சியும் வீணாகப் போய்விட்டதோ என்ற எண்ணம் வருகிறது
கலை இயக்குநர் அமரர் மிலன் இந்த படத்தில் தனக்கான வேலையை கட்சிதமாக செய்துள்ளார் , மண்டை ஓடு தோரணம், யானைத் தந்த தூண், சட்டப்பாறை, ஆராய்ச்சி கூடம் என அவர் கடின உழைப்பை இப்படத்தில் காட்டி இருப்பது ஆறுதலே
படத்திற்கான ஒளிப்பதிவு வெற்றி பழனிச்சாமி.ஒவ்வொரு தீவை காட்டி இருப்பது அற்புதமாக இருந்தாலும் ஓரளவுக்காவது தெளிவாகத் தெரிய வேண்டாமா ?
கதை தான் இருட்டு என்றால் காட்சிகளும் இருட்டாகவே இருந்தது !
3 டி கண்ணாடியோடு பிரமிக்க வைக்கும் என்று எதிர்பார்த்தால் கண்கள் வலித்ததுதான் மிச்சம். தேவிஸ்ரீ பிரசாத் அவர்களின் இசையும் நம்மை ஏமாற்றி விட்டது.
படத்தில் சண்டை மட்டுமே அதிகம் காண முடிகிறது .
சுப்ரீம் சுந்தர் மற்றும் அவர்களுது குழுவினரும் கடின உழைப்பை காட்டி உள்ளார்கள்
பிரம்மாண்டம் வேண்டும் என்றால் திரை அரங்கிற்கு சென்று பாருங்கள் !
இல்லையெனில் Ott -யில் கண்டு ரசியுங்கள் !
இரண்டு வருடங்களுக்கு மேல் சூர்யா வை திரையில் காண ஆர்வப்பட்ட ரசிகர்கள் சோகத்தோடு வெளிய வருவதை பார்க்கும் பொழுது !
சூர்யா வின் உழைப்பு வீணாக விட்டதோ என்று கண் கலங்க வைத்து விட்டது கங்குவா. காங்குவா படம் பற்றி மேலும் அறிய
Leave a Reply